GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

உங்களுக்கு தெரியுமா?

1. உலகின் மிகப்பெரிய உயிரினம் "நீல திமிங்கிலம்" (Blue Whale) ஆகும். இது சுமார் 30 மீட்டர் வரை நீளமும், சுமார் 180 மெட்ரிக் டன் எடையும் கொண்டிருக்கக்கூடும்.இதன் இதயம் ஒரு கார் அளவுக்கு பெரியது!

2. யூனிகார்ன் என்பது தலையில் ஒரு நீண்ட கொம்பு கற்பனைக் குதிரை ஆகும்.இது ஸ்காட்லாந்தின் (Scotland) அதிகாரப்பூர்வ தேசிய விலங்கு ஆகும்! ஏனெனில், யூனிகார்ன் தூய்மை, தன்னாட்சி, மற்றும் சுதந்திர மனப்பான்மையின் சின்னமாக கருதப்படுகிறது.இது ஸ்காட்லாந்தின் பழங்கால அரசியல் சின்னங்களில் முக்கியமான இடம் பெற்றுள்ளது

3. உலகின் மிகச்சிறிய நாட்டாக வாடிகன் நகரம் (Vatican City) இருக்கிறது. இது சுமார் 0.49 சதுர கிலோமீட்டர் மட்டுமே பரப்பளவுடையது.

4. நமது பற்கள் எலும்பு இல்லை, ஆனால் அது எலும்பை விட வலுவானது. இது மென்மையானதாகத் தோன்றினாலும், மிகவும் கடினமான 'எனாமல்' (Enamel) என்ற பொருளால் ஆனது!

5. Y2K பிழை (Year 2000 bug) என்பது கணினி வரலாற்றிலேயே பெரிய பிழையாகக் கருதப்பட்டது. அப்போது, ஆண்டுகளுக்காக எ.கா. 98, 99 என இரு இலக்கங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டதால், 2000 ஆம் ஆண்டு வந்ததும் கணினிகள் அதை 1900 என தவறாகப் புரிந்துகொள்வதற்கான அபாயம் ஏற்பட்டது. இதனால், முக்கிய கணினி அமைப்புகள் முடங்கும் என்ற பயம் எழுந்தது, ஆனால் முன்னெச்சரிக்கைகள் பெரும்பாலான பாதிப்புகளைத் தடுப்பதில் வெற்றியடைந்தன.

6. சந்திரனில் காற்றோட்டம் இல்லாததால், அங்கு உருவான தடங்களை அழிக்க இயற்கை சக்திகள் எதுவும் இல்லை. எனவே, ஒரு காலடி தடம் அங்கு பதிக்கப்பட்டால், அது கோடிக்கணக்கான ஆண்டுகள் நிலைத்திருக்கலாம். 1969-ல் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கின் பதித்த தடம் கூட இப்போது அங்கே இருக்கக்கூடும்!

7. நம் நரம்புகள் தகவல்களை சுமார் 400 கிமீ/மணி வேகத்தில் மூளைக்குச் செலுத்தும் திறன் கொண்டவை. இதனால், வலி அல்லது தொடும் உணர்வுகளை நம் மூளை துல்லியமாகவும் உடனடியாகவும் உணர்கிறது. இவ்வளவு அதிவேக தகவல் பரிமாற்றம் நம் உடலை உரிய நேரத்தில் பதிலளிக்கச் செய்கிறது!

8. மனிதர்கள் சிரிக்கும் போது, உடலில் இருந்து "எண்டார்பின்கள்" எனப்படும் இயற்கை வேதிப்பொருட்கள் சுரக்கின்றன. இவை, நம் மூளையின் வலி நீக்கி (painkillers) போலவே செயல்பட்டு, வலியைக் குறைத்து மனநலத்தை உயர்த்துகின்றன.

9. கை விரல் நகங்கள், கால் நகங்களை விட வேகமாக வளரும். ஏனெனில் கை விரல்கள் இதயத்திற்கு அருகிலிருக்கின்றன.இதனால் அங்கு இரத்த ஓட்டம் அதிகமாகும். அதிகமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்சிஜன் கிடைப்பதால் நகங்கள் விரைவாக வளரும்.

10. நாம் ஒரு நிமிடத்தில் சுமாராக 12 முதல் 20 முறை சுவாசிக்கிறோம். இதை ஒரு நாளில் (24 மணி நேரம்) கணக்கிட்டால், அது சுமார் 17,000 முதல் 30,000 முறை வரைக்கும் ஆகலாம். எனவே, சராசரியாக 20,000 முறை வரை நாம் சுவாசிக்கிறோம்.

;