வரலாறு வினா விடைகள்
1. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்?
- A. சரோஜினி நாயுடு
- B. இந்திரா காந்தி
- C. சோனியா காந்தி
- D. மேனகா காந்தி
2. இந்தியாவின் "இரும்பு மனிதர்" என்று அழைக்கப்படுவது யார்?
- A. ஜவஹர்லால் நேரு
- B. சுபாஷ் சந்திரபோஸ்
- C. சர்தார் வல்லபாய் பட்டேல்
- D. பகத் சிங்
3. இந்தியாவின் சுதந்திர தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
- A. 26 ஜனவரி
- B. 15 ஆகஸ்ட்
- C. 2 அக்டோபர்
- D. 26 நவம்பர்
4. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் முதன்முதலில் எந்த இடத்தில் தரையிறங்கினர்?
- A. கோவா
- B. சூரத்
- C. கொல்கத்தா
- D. சென்னை
5. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து நடைபெற்ற முதல் பெரிய போராட்டம் எது?
- A. சிப்பாய் கிளர்ச்சி (1857)
- B. பிளாசி போர்
- C. உப்பு சத்தியாகிரகம்
- D. ரெளலட் சட்டம் போராட்டம்
6. கல்லணையைக் கட்டியவர் யார்?
- A. கரிகால சோழன்
- B. ராஜராஜ சோழன்
- C. நெடுஞ்சேழியன்
- D. மாறன்
7. பாண்டியர்களின் சின்னமாக எது இருந்தது?
- A. மீன்
- B. சிங்கம்
- C. நந்தி
- D. யானை
8. ஹரப்பா நாகரிகம் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
- A. கங்கை நதிக்கரை
- B. ராவி நதிக்கரை
- C. யமுனா நதிக்கரை
- D. நைல் நதிக்கரை
9. கற்கால மனிதர்கள் முதலில் எந்த வகையான வாழ்க்கையை வாழ்ந்தனர்?
- A. வேளாண்மை
- B. வேட்டையாடுதல் மற்றும் உணவு சேகரித்தல்
- C. கைத்தொழில்
- D. நகர வாழ்க்கை
10. கீழடி அகழாய்வுகள் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளன?
- A. திண்டுக்கல்
- B. மதுரை
- C. சிவகங்கை
- D. தஞ்சாவூர்
11. தாயகத்திற்காக உயிர் தியாகம் செய்தபோது 23 வயதான புரட்சியாளர் யார்?
- A. பகத் சிங்
- B. சுபாஷ் சந்திர போஸ்
- C. வ.உ.சிதம்பரம் பிள்ளை
- D. திருப்பூர் குமரன்
12. இந்தியாவின் நெப்போலியன் என்று யார் அழைக்கப்படுகிறார்?
- A. அசோகர்
- B. சமுத்திரகுப்தர்
- C. அக்பர்
- D. சிவாஜி
13. இந்தியாவின் முதல் பெண் சுதந்திர போராட்ட வீரர் யார்?
- A. வீரமங்கை ராணி வேலுநாச்சியார்
- B. கித்தூர் சென்னம்மா
- C. சரோஜினி நாயுடு
- D. அன்னி பெசன்ட்
14. தாஜ்மகாலை கட்டிய முகலாய பேரரசர் யார்?
- A. பாபர்
- B. அக்பர்
- C. ஷாஜகான்
- D. அவுரங்கசீப்
15. தஞ்சை பெரிய கோவிலை கட்டிய சோழ மன்னன் யார்?
- A. கரிகால சோழன்
- B. ராஜராஜ சோழன்
- C. ராஜேந்திர சோழன்
- D. குலோத்துங்க சோழன்
16. வந்தே மாதரம் பாடலை பாடியவர் யார்?
- A. பங்கிம் சந்திர சட்டர்ஜி
- B. ரவீந்திரநாத் தாகூர்
- C. சுபாஷ் சந்திர போஸ்
- D. சரோஜினி நாயுடு
17. அக்பரின் அரசவையில் இருந்த ‘நவரத்தினங்களில்’ ஒருவர் யார்?
- A. பீர்பால்
- B. சாணக்கியர்
- C. பாணினி
- D. நூர்ஜஹான்
18. பாண்டியர்களின் தலைநகரம் எது?
- A. தஞ்சாவூர்
- B. மதுரை
- C. காஞ்சிபுரம்
- D. திருச்சி
19. சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் மூவேந்தர்கள் யார்?
- A. சோழர், பாண்டியர், பல்லவர்
- B. சோழர், நாயக்கர், பாண்டியர்
- C. சேரர், பல்லவர், சாளுக்கியர்
- D. சேரர், சோழர், பாண்டியர்
20. முக்கடல் சங்கமிக்கும் இடத்தில், கடலுக்குள் பாறையில் மீது அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை எங்கு உள்ளது?
- A. தஞ்சாவூர்
- B. மதுரை
- C. கன்னியாகுமரி
- D. சென்னை
21. “ஆயிரம் கோயில்களின் நகரம்” என அழைக்கப்படும் தமிழ்நாட்டின் நகரம் எது?
- A. மதுரை
- B. காஞ்சிபுரம்
- C. திருச்சி
- D. வேலூர்
22. பழங்கால மனிதர்கள் குகைகளில் வரைந்த ஓவியங்கள் இந்தியாவில் எங்கு காணப்படுகின்றன?
- A. பிம்பேட்கா(மத்தியப் பிரதேசம்)
- B. அஜந்தா
- C. எலோரா
- D. கஜுராஹோ
23. மனிதன் முதன்முதலில் பயன்படுத்திய உலோகம் எது?
- A. தங்கம்
- B. வெள்ளி
- C. செம்பு
- D. இரும்பு
24. மனிதன் முதலில் பழக்கப்படுத்திய விலங்கு எது?
- A. பசு
- B. நாய்
- C. ஆடு
- D. குதிரை
25. காகிதத்தை முதலில் கண்டுபிடித்த நாடு எது?
- A. இந்தியா
- B. எகிப்து
- C. சீனா
- D. ரோம்