விளையாட்டு வினா விடைகள்
1. இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?
- A. ஹாக்கி
- B. கிரிக்கெட்
- C. கால்பந்து
- D. கபடி
2. "God of Cricket" என்று அழைக்கப்படும் வீரர் யார்?
- A. விராட் கோலி
- B. மகேந்திரசிங் தோனி
- C. இராகுல் திராவிட்
- D. சச்சின் டெண்டுல்கர்
3. ஒலிம்பிக் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது?
- A. 2
- B. 3
- C. 4
- D. 5
4. 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ரா எந்த விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றார்?
- A. நீச்சல்
- B. ஈட்டி எறிதல்(javelin throw)
- C. துப்பாக்கி சுடுதல்
- D. உயரம் தாண்டுதல்
5. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) முதன்முறையாக எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது?
- A. 2008
- B. 2009
- C. 2006
- D. 2007
6. 2025-ல் தனது முதல் IPL சாம்பியன் பட்டத்தை வென்ற அணி எது?
- A. மும்பை இந்தியன்ஸ்
- B. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(RCB)
- C. சென்னை சூப்பர் கிங்ஸ்
- D. பஞ்சாப் கிங்ஸ்
7. கால்பந்து (Football) விளையாட்டில் ஒரு அணியில், கோல்கீப்பர் உட்பட, எத்தனை வீரர்கள் உள்ளனர்?
- A. 7
- B. 9
- C. 11
- D. 13
8. டென்னிஸ் போட்டியில், “Love” என்றால் என்ன?
- A. 0 புள்ளி
- B. 15 புள்ளி
- C. சம அளவு புள்ளிகள்
- D. 30 புள்ளி
9. ஒலிம்பிக் விளையாட்டில் முதல் முறையாக பெண்கள் எந்த ஆண்டு போட்டியிட்டனர்?
- A. 1912
- B. 1900
- C. 1910
- D. 1896
10. சதுரங்கத்தில் “Checkmate” என்றால் என்ன?
- A. ராஜாவுக்கு எந்த பாதுகாப்பும் இல்லாமல் பிடிக்கபட்ட நிலை
- B. போட்டி டிரா ஆகும் நிலை
- C. அரசர் பாதுகாப்பான நிலை
- D. வெற்றி
11. ஹெலிகாப்டர் ஷாட் அடித்து உலகளாவிய புகழ் பெற்றவர் யார்?
- A. சச்சின் டெண்டுல்கர்
- B. எம்.எஸ். தோனி
- C. விராட் கோலி
- D. யுவராஜ் சிங்
12. கிரிக்கெட் விளையாட்டில் 'டக்' என்பது எதை குறிக்கிறது?
- A. வீரர் பந்தை தவிர்ப்பது
- B. வீரர் 50 ரன்கள் அடிதல்
- C. வீரர் 0 ரன்களில் ஆட்டமிழக்கப்படுவது
- D. வீரர் 100 ரன்கள் அடிதல்
13. டே-நைட் டெஸ்ட் போட்டிகளில் எந்த வகை பந்து பயன்படுத்தப்படுகிறது?
- A. நீல பந்து
- B. சிவப்பு பந்து
- C. பிங்க் பந்து
- D. வெள்ளை பந்து
14. கிரிக்கெட்டில் "Powerplay" முறை எதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது?
- A. பந்து எடை குறைக்க
- B. மழையால் போட்டி பாதிக்காமல் இருக்க
- C. குறிப்பிட்ட ஓவர்களில் பீல்டிங் கட்டுப்பாடுகள் விதித்து, பேட்ஸ்மேன்களுக்கு அதிக ரன்கள் எடுக்க வாய்ப்பு தர
- D. விக்கெட் கீப்பர் மாற்றம் செய்ய
15. மூன்றாவது அம்பையர் கிரிக்கெட்டில் என்ன பங்கு வகிக்கிறார்?
- A. பந்து வீச்சு வேகத்தை கணக்கிடுகிறார்
- B. வீரர்களின் உடல் நிலையை பரிசோதிக்கிறார்
- C. களத்தில் உள்ள நடுவர்கள் சந்தேகத்திற்கு இடமான சூழ்நிலைகளில் எடுக்கும் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய உதவும் ஒரு மூன்றாவது நடுவர்
- D. ரசிகர்களின் கருத்துகளை பதிவு செய்கிறார்
16. பண்டைய ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலில் வழங்கப்பட்ட பரிசு என்ன?
- A. தங்க பதக்கம்
- B. பண பரிசு
- C. ஆலிவ் மர இலைகளால் ஆன கிரீடம் (ஆலிவ் கிளை மாலை)
- D. வெள்ளி பதக்கம்
17. ஒலிம்பிக் தீப்பந்தப் பயணம்(Torch Relay) என்றால் என்ன?
- A. ஒலிம்பிக் வீரர்களுக்கான பயிற்சி முகாம்
- B. ஒலிம்பிக் தீப்பந்தம் ஒலிம்பியாவில் இருந்து போட்டி நடைபெறும் நகரம் வரை எடுத்துச் செல்லப்படும் பயணம்
- C. ஒலிம்பிக் தொடக்க விழாவில் நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சி
- D. ஒலிம்பிக் பதக்கங்களை வீரர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி
18. 1976 மான்ட்ரியல் ஒலிம்பிக் Torch Relay வரலாற்றில், தீப்பந்தம் நீரில் எடுத்துச் செல்லப்பட்டபோது, ஒரு நீச்சல் வீரர் அதை எவ்வாறு நீந்தியபடி எடுத்துச் சென்றார்?
- A. கப்பலில் வைத்து
- B. நீர்ப்புகா தீப்பந்தம் (Waterproof torch) மற்றும் ஃபைபர் ஆப்டிக் தொழில்நுட்பம் மூலம்
- C. தீப்பந்தத்தை மூடப்பட்ட பெட்டியில் வைத்து
- D. தீப்பந்தத்தை ரோபோட் மூலம் நீருக்குள் செலுத்தி
19. 2008 பீஜிங் ஒலிம்பிக் தீப்பந்தப் பயணம்(Torch Relay) உலகில் அதிக தூரம் சென்றதாகக் கருதப்படுகிறது. அந்த Torch Relay எவ்வளவு கிலோமீட்டர் பயணம் செய்தது?
- A. 50,000 கி.மீ
- B. 85,000 கி.மீ
- C. 137,000 கி.மீ
- D. 200,000 கி.மீ
20. ஒரே கிரிக்கெட் உலகக்கோப்பையில் அதிகமான ரன்கள் எடுத்த முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீரர் யார்?
- A. ஹர்மன்பிரீத் கவுர்
- B. ஸ்மிருதி மந்தனா
- C. மிதாலி ராஜ்
- D. ஜெமிமா ரோட்ரிக்ஸ்
21. சச்சின் டெண்டுல்கர் எந்த அணிக்கு எதிராக ஒருநாள் சர்வதேச (ODI) போட்டியில் 200 ரன்கள் அடித்து முதல் இரட்டை சதம் சாதனை படைத்தார்?
- A. ஆஸ்திரேலியா
- B. பாகிஸ்தான்
- C. தென்னாப்பிரிக்கா
- D. இலங்கை
22. ஃபார்முலா 1 ரேசிங் வரலாற்றில் முதல் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆண் வீரர் யார்?
- A. மைக்கேல் ஷூமேக்கர்
- B. ஃபாங்கியோ
- C. கியூசெப் ஃபரினா
- D. லூயிஸ் ஹாமில்டன்
23. உலக பைக் ரேசிங் போட்டிகளில் கலந்து சாதனை படைத்த இந்திய முன்னணி பைக் ரேசர் யார்?
- A. ரஜினி கிருஷ்ணன்
- B. வாலென்டினோ ரோஸ்ஸி
- C. மார்க் மார்க்வெஸ்
- D. ஜியாகோமோ
24. உலக ஹெவிவெயிட் பாக்ஸிங் சாம்பியன் பட்டத்தை அதிக முறை வென்றவர் யார்?
- A. முகம்மது அலி
- B. மைக் டைசன்
- C. லெனாக்ஸ் லூயிஸ்
- D. ஜோ லூயிஸ்
25. 2016 ரியோ பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டும் (High Jump) பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி வீரர் யார்?
- A. தருண் அய்யசாமி
- B. மாரியப்பன் தங்கவேலு
- C. சதீஷ் சிவலிங்கம்
- D. நவீன் குமார்