Tnpsc கேள்விகள்
Tnpsc Group 4 Previous year questions
Tnpsc Group 2 Previous year questions
Tnpsc Group 1 Previous year questions
1. எந்த ஆண்டு இந்திய அரசால் முதல் செம்மொழியாக தமிழ் மொழி அறிவிக்கப்பட்டது?
- A. 2008
- B. 2010
- C. 2004
- D. 2002
2. தமிழக அரசின் பாவேந்தர் நினைவுப்பரிசினைப் பெற்ற முதற்பாவலர்
- A. வாணிதாசன்
- B. உவமைக் கவிஞர் சுரதா
- C. மு. மேத்தா
- D. ஈரோடு தமிழன்பன்
3. நகராட்சி நிர்வாகத்தின் முதன்மை நிர்வாக அலுவலர் யார்?
- A. நகர மேலாளர்
- B. நகராட்சி ஆணையர்
- C. மாவட்ட ஆட்சியர்
- D. காவல்துறை உதவி ஆணையர்
4. அம்பேத்கர் : ஒரு வாழ்க்கை" என்னும் புத்தகத்தை எழுதியவர் யார்?
- A. சசி தரூர்
- B. அஸ்வின் பெர்னாண்டஸ்
- C. மேக்நாத் தேசாய்
- D. சத்யஜித் ரே
5. ஹரப்பர்களால் அறியப்படாத விலங்கு எது?
- A. பன்றி
- B. யானை
- C. குதிரை
- D. எருமை
6. மனித உரிமை நாள் கொண்டாடப்படுவது _________ ஆகும்.
- A. டிசம்பர் 9
- B. டிசம்பர் 11
- C. டிசம்பர் 10
- D. டிசம்பர் 12
7. சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியின் ஆரம்ப மொத்த முதலீட்டு தொகை
- A. ரூ.2 இலட்சம்
- B. ரூ.5 இலட்சம்
- C. ரூ.8 இலட்சம்
- D. ரூ.10 இலட்சம்
8. "ஞாலம் கருதினும் கை கூடும்" மேற்கூறிய திருக்குறளின்படி ஒருவர் உலகம் முழுவதையும் கைப்பற்றக் கருதினாலும் அவர் எந்த இரண்டை அறிந்து செயல்பட வேண்டும்?
- A. செல்வமும்,வீரமும்
- B. காலமும், இடமும்
- C. சகோதர - சகோதரி உதவி
- D. தாய், தந்தை உதவி
9. பின்வருவனவற்றில் எந்த மாநிலம் சதுப்புநில மானை மாநில விலங்காகக் கொண்டுள்ளது ?
- A. கேரளா
- B. நாகாலாந்து
- C. ஹரியானா
- D. மகாராஷ்டிரா
10. 'வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்' எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
- A. நவம்பர்-9
- B. டிசம்பர்-9
- C. ஜனவரி-9
- D. பிப்ரவரி -9
11. கூற்று : யானைகள் விரைந்து ஓடியது. காரணம் : யானைகள் என்ற பலவின்பால் பெயருக்கு 'அது' என்ற ஒன்றன்பால் விகுதியே இடம்பெற வேண்டும்.
- A. கூற்று - சரி; காரணம் - சரி
- B. கூற்று - தவறு; காரணம் - சரி
- C. கூற்று - சரி; காரணம் - தவறு
- D. கூற்று - தவறு; காரணம் – தவறு
12. கூற்று [A] : அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே. காரணம் [R] : ஒருவருக்கு அதனை விடச் சிறந்த செல்வம் வேறு உண்டு.
- A. [A] சரி [R] தவறு
- B. [A] மற்றும் [R] இரண்டும் சரி
- C. [A] மற்றும் [R] இரண்டும் தவறு
- D. [A] தவறு [R] சரி
13. தொடரமைக்க : விரிந்தது - விரித்தது
- A. மாலை நேரத்தில் அல்லி இதழ் விரித்தன; மயில் தோகை விரிந்தது
- B. மாலை நேரத்தில் அல்லி இதழ்கள் விரித்தன; மயில் தோகை விரித்தன
- C. மாலை நேரத்தில் அல்லியின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகை விரித்தது
- D. மாலை நேரத்தில் அல்லியின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது
14. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக. Visual Scanner
- A. காட்சிப் பக்கம்
- B. படப்பிடிப்பு
- C. கட்புலமேவி
- D. காட்சி உணர்தல்
15. "கடுகு சிறுத்தாலும் காரம் போகுமோ?" எனும் பழமொழியின் பொருள் கண்டறிக.
- A. பெருமை
- B. கர்வம்
- C. குறைத்து மதிப்பிடாதே
- D. புகழ்
16. வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது யாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்?
- A. நேதாஜி
- B. பாரதியார்
- C. பாரதிதாசன்
- D. திரு.வி.க.
17. பிரம்மஞான சபை பற்றிய சரியான வாக்கியங்களை தேர்வு செய்க. (i) மேடம் பிளாவட்ஸ்கி மற்றும் கர்னல் H.S. ஆல்காட் ஆகியோரால் பிரம்மஞான சபை நியூயார்க்கில் தோற்றுவிக்கப்பட்டது. (ii) 1888-ல் இந்தியாவில் அன்னிபெசன்ட் அம்மையார் இதில் இணைந்தார். (iii) இதன் தலைமையகம் சென்னை அடையாறில் உள்ளது.
- A. (i) மற்றும் (ii)
- B. (ii) மற்றும் (iii)
- C. (i) மற்றும் (iii)
- D. (iii) மட்டும்
18. கீழ்கண்டவற்றுள் எது தவறாக பொருந்தி உள்ளது? (1) டிரான்ஸ் சைபீரியன் இருப்புப்பாதை - இது பால்டிக் கடலையும், பசிபிக் பெருங்கடலையும் இணைக்கிறது (2) டிரான்ஸ் காஸ்பியன் இருப்புப்பாதை - இது மத்திய ஆசியாவையும் ஜப்பானையும் இணைக்கிறது (3) கனேடியன் பசிபிக் இருப்புப்பாதை - இது அட்லாண்டிக் பெருங்கடலையும், இந்திய பெருங்கடலையும் இணைக்கிறது (4) டிரான்ஸ் கான்டினென்டல் இருப்புப்பாதை - இது பியூனஸ் அயர்ஸ் நகரத்தையும் வால்பரைஸோ நகரத்தையும் இணைக்கிறது
- A. (1) மட்டும்
- B. (2) மட்டும்
- C. (3) மட்டும்
- D. (4) மட்டும்
19. கூற்று [A] : பல்லவர்கள், மரம், சுதை, உலோகம், செங்கல் போன்ற கட்டுமானப் பொருள்கள் இன்றிக் குடைவரைக் கோவில்களை உருவாக்கினர். காரணம் [R] : கருங்கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிச் சுண்ணம் சேர்க்காமல் கட்டப்படும் கட்டடங்களுக்குக் “கற்றளிகள்” என்று பெயர்.
- A. [A] சரி ஆனால் [R] தவறு
- B. [A] தவறு ஆனால் [R] சரி
- C. [A] மற்றும் [R] இரண்டும் சரி
- D. [A] மற்றும் [R] இரண்டும் தவறு
20. தவறான இணையைக் கண்டுபிடி. (1) தென்திராவிட மொழி - மலையாளம் (2) கிழக்கு திராவிட மொழி - முண்டா (3) நடுத்திராவிட மொழி - தெலுங்கு (4) வடதிராவிட மொழி - குரூக்
- A. (1)
- B. (2)
- C. (3)
- D. (4)
21. இந்தியாவின் பணவீக்கம் அதிகமாக இருப்பதற்கான காரணம்
- A. அதிக தேவை
- B. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறைவு
- C. குறைவான உற்பத்தி
- D. குறைவான பண அளிப்பு
22. பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்
- A. எம்.ஜி. இராமச்சந்திரன்
- B. மூதறிஞர் இராஜாஜி
- C. பெருந்தலைவர் காமராசர்
- D. கலைஞர் கருணாநிதி
23. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிந்து எழுதுக. 'கோல்டு பிஸ்கட்'
- A. வைரக்கட்டி
- B. அலுமினியக்கட்டி
- C. தங்கக்கட்டி
- D. தாமிரக்கட்டி
24. ‘தண்டளிர்ப்பதம்' இச்சொல்லைச் சரியாகப் பிரித்திடும் முறையைத் தேர்வு செய்க.
- A. தண் + அளிர் + பதம்
- B. தன்மை + தளிர் + பதம்
- C. தண்மை + தளிர் + பதம்
- D. தண்டளிர் + பதம்
25. கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளை காலவரிசைப்படுத்துக. 1. புலித்தேவரின் இறப்பு 2. குயிலியின் இறப்பு 3. கட்டப்பொம்மனின் இறப்பு 4. மருதுசகோதரர்களின் இறப்பு
- A. 2, 3, 1, 4
- B. 1, 2, 3, 4
- C. 1, 3, 2, 4
- D. 3, 1, 4, 2