புவியியல் வினா விடைகள்
1. பூமி சூரியனை ஒரு முழு சுற்றுக்கான காலம் எவ்வளவு?
- A. சுமார் 365.25 நாட்கள்
- B. 7 நாட்கள்
- C. 30 நாட்கள்
- D. 28 நாட்கள்
2. உலகிலேயே உயரமான மலை எது?
- A. கிளிமஞ்சாரோ
- B. எவரெஸ்ட்
- C. மெக்கின்லி
- D. அந்தீஸ்
3. புவியில் மக்கள் தொகையில் முதன்மையான இடத்தைப் பிடிக்கும் கண்டம் எது?
- A. ஆப்பிரிக்கா
- B. ஆசியா
- C. வட அமெரிக்கா
- D. தென் அமெரிக்கா
4. புவியின் மையத்தில் உள்ள முக்கிய உலோகங்கள் எவை?
- A. அலுமினியம் மற்றும் தங்கம்
- B. இரும்பு மற்றும் நிக்கல்
- C. வெள்ளி மற்றும் தாமிரம்
- D. சிலிக்கான் மற்றும் கார்பன்
5. நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் என்ன?
- A. பருவநிலை மாற்றம்
- B. நிலத்தின் ஈரப்பதம் அதிகரிப்பு
- C. கடல்சார்ந்த காற்றழுத்தம்
- D. டெக்டோனிக் தட்டுகள் நகர்ந்து உராய்வதால் ஏற்படும் அழுத்தம் திடீரென வெளியேறுவதால்
6. உலகின் மிக ஆழமான கடல் எது?
- A. இந்தியப் பெருங்கடல்
- B. அட்லாண்டிக் பெருங்கடல்
- C. பசிபிக் பெருங்கடல்
- D. ஆர்க்டிக் பெருங்கடல்
7. உலகில் இரண்டாவது நீளமான கடற்கரை எது?
- A. மெரினா கடற்கரை
- B. கோவா கடற்கரை
- C. பிரயா டோ கேசினோ
- D. கன்னியாகுமரி கடற்கரை
8. புவியின் பரப்பில் மிகப்பெரிய தீவு எது?
- A. மடகாஸ்கர்
- B. கிரீன்லாந்து
- C. போர்னியோ
- D. நியூ கினி
9. புவியின் பரப்பில் மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?
- A. நயாகரா
- B. ஏஞ்சல் நீர்வீழ்ச்சி
- C. விக்டோரியா நீர்வீழ்ச்சி
- D. இகுவாசு
10. புவியின் பரப்பில் மிகப்பெரிய காடு எது?
- A. அமேசான்
- B. காங்கோ காடு
- C. சுந்தரவனக்காடுகள்
- D. சைபீரிய காடு
11. சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம் எது?
- A. செவ்வாய்
- B. புதன்
- C. வெள்ளி
- D. பூமி
12. பூமியின் இயற்கையான செயற்கைக் கோள் எது?
- A. ஸ்புட்னிக் 1
- B. சந்திரன்
- C. ஆரியபட்டா
- D. இன்சாட்-1B
13. புளூட்டோ 2006-ஆம் ஆண்டு கிரக பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணங்கள் எவை?
- A. புளூட்டோ சூரியனைச் சுற்றி வரவில்லை
- B. புளூட்டோ கோள வடிவத்தில் இல்லை
- C. புளூட்டோ அதன் சுற்றுப்பாதையில் உள்ள மற்ற பொருட்களை துப்புரவு செய்யவில்லை
- D. அனைத்தும்
14. “சிவப்புக் கிரகம்” என்று அழைக்கப்படும் சூரிய மண்டலத்தின் கிரகம் எது?
- A. புதன்
- B. செவ்வாய்
- C. வெள்ளி
- D. வியாழன்
15. சூரியனுக்கு மிக அருகிலுள்ள கிரகம் புதன் ஆக இருந்தும், சூரிய குடும்பத்தில் மிக அதிக வெப்பமுடைய கிரகம் வெள்ளி ஆக இருப்பதற்கான காரணம் என்ன?
- A. புதன் கிரகத்தில் வளிமண்டலம் இல்லை,இதனால் வெப்பம் நீண்ட நேரம் தங்காது
- B. வெள்ளி கிரகத்தில் பசுங்குடில் விளைவை (greenhouse effect) ஏற்படுத்தும் அடர்த்தியான கார்பன் டை ஆக்சைடு வளிமண்டலம் உள்ளது, இதனால் வெப்பம் சிறைப்பிடிக்கப்படுகிறது
- C. வெள்ளி கிரகம் சூரியனிடமிருந்து அதிக வெப்பத்தை உறிஞ்சுகிறது
- D. மேலே கூறிய அனைத்தும்
16. விஞ்ஞானிகள் உயிர்கள் வாழக்கூடிய சாத்தியம் உள்ளதாக கருதும் கிரகங்கள் எவை?
- A. செவ்வாய் (Mars)
- B. K2-18b
- C. இரண்டும்
- D. எதுவும் இல்லை
17. “இந்தியாவின் அரிசி களஞ்சியம்” என்று அழைக்கப்படும் மாநிலம் எது?
- A. பஞ்சாப்
- B. தமிழ்நாடு
- C. ஆந்திரப் பிரதேசம்
- D. மேற்கு வங்காளம்
18. இந்தியாவில் “குளிர் பாலைவனம்” என்று அழைக்கப்படும் பகுதி எது?
- A. லடாக்
- B. ராஜஸ்தான்
- C. சிக்கிம்
- D. ஹிமாச்சலப் பிரதேசம்
19. இந்தியாவில் மிக நீளமான ரயில் பாதை எது?
- A. விவேக் எக்ஸ்பிரஸ் - Dibrugarh to Kanyakumari(சுமார் 4200 km)
- B. ஹவுரா – சென்னை ரயில் பாதை
- C. மும்பை – டெல்லி ரயில் பாதை
- D. ஹவுரா – அம்ரித்சர் ரயில் பாதை
20. “வெள்ளை யானைகளின் நாடு” (The Land of White Elephants) என்று அழைக்கப்படும் நாடு எது?
- A. இந்தியா
- B. தாய்லாந்து
- C. மியான்மார்
- D. இலங்கை
21. “கிரேட் வால்” (Great Wall) எனப்படும் புகழ்பெற்ற சுவர் எங்கு அமைந்துள்ளது?
- A. ஜப்பான்
- B. இந்தியா
- C. சீனா
- D. தென் கொரியா
22. உலகில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடு எது?
- A. நியூசிலாந்து
- B. நவூரு
- C. வாடிகன் நகரம்
- D. துவாலு
23. “சூயஸ் கால்வாய்” (Suez Canal) எந்த இரண்டு கடல்களை இணைக்கிறது?
- A. அரபிய கடல் மற்றும் பசிபிக் கடல்
- B. செங்கடல் மற்றும் மத்தியதரைக் கடல்
- C. கரிபியன் கடல் மற்றும் அட்லாண்டிக் கடல்
- D. செங்கடல் மற்றும் அர்க்டிக் கடல்
24. உலகில் மிக அதிக எரிமலைகள் (Volcanoes) கொண்ட நாடு எது?
- A. ஜப்பான்
- B. ரஷ்யா
- C. இந்தோனேசியா
- D. அமெரிக்கா
25. கோடை காலத்தில் 24 மணி நேரமும் சூரியன் வானத்தில் தென்படும் "மிட்நைட் சன்" (Midnight Sun) எனப்படும் இயற்கை நிகழ்வு கீழ்காணும் எந்த நாடுகளில் காணப்படுகிறது?
- A. இந்தியா மற்றும் சீனா
- B. நார்வே மற்றும் ஸ்வீடன்
- C. எகிப்து மற்றும் லெபனான்
- D. பிரேசில் மற்றும் அர்ஜென்டினா