தமிழ் பழமொழி
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
பொருள்
ஒருவருடைய மனதின் எண்ணங்கள் அவரது முகத்தில் வெளிப்படும்.
விளக்கம்
மனிதனின் மனதில் தோன்றும் மகிழ்ச்சி, கவலை, கோபம், பயம் போன்ற அனைத்து உணர்ச்சிகளையும் அவனது முக பாவங்கள் அப்படியே பிரதிபலித்துக் காட்டிவிடும். அகமாகிய மனதை முகமாகிய கண்ணாடி காட்டும் என்பதே இதன் தத்துவமாகும்.