GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

திருக்குறள்

திருக்குறள் சிறப்புத் தகவல்கள்

மொத்த குறள்கள்
1330
மொத்த அதிகாரங்கள்
133
மொத்த பால்கள்
3

திருக்குறள் அமைப்பு

ஒரு அதிகாரத்தில் உள்ள குறள்கள்
10
ஒவ்வொரு குறளிலும் உள்ள சீர்கள்
7
முப்பாலில் உள்ள குறள்கள்
அறத்துப்பால் – 380
பொருட்பால் – 700
காமத்துப்பால் – 250
முப்பாலில் உள்ள இயல்கள்
அறத்துப்பால் – 4
பொருட்பால் – 3
காமத்துப்பால் – 2
முதல் அடியில் உள்ள சீர்கள்
4
இரண்டாம் அடியில் உள்ள சீர்கள்
3

அரிய தகவல்கள்

குறிப்பிடப்படும் மலர்கள்
அனிச்சம், குவளை
குறிப்பிடப்படும் மரங்கள்
பனை, மூங்கில்
குறிப்பிடப்படும் பழம்
நெருஞ்சிப்பழம்
குறிப்பிடப்படும் விதை
குன்றிமணி
திருக்குறளின் மற்ற பெயர்கள்
முப்பால், உலகப்பொதுமறை, பொய்யாமொழி, பொதுமறை, தமிழ்மறை, உத்தரவேதம்
“தமிழ்” மற்றும் “கடவுள்” என்ற சொற்கள்
இடம்பெறவில்லை
“ஔ” என்ற உயிரெழுத்து
இடம்பெறவில்லை
இடம்பெறாத தமிழ் எழுத்துகள்
37
மொத்த எழுத்துகள்
42,194

ஆசிரியர் குறிப்பு

ஆசிரியர்
திருவள்ளுவர்
சிறப்புப் பெயர்கள்
நாயனார், தெய்வப்புலவர், முதற்பாவலர், பொய்யாமொழிப் புலவர், பெருநாவலர், செந்நாப்போதார், மாதானுபங்கி
காலம்
கி.மு. 1ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 1ஆம் நூற்றாண்டு வரையிலான காலம் எனக் கருதப்படுகிறது. தமிழறிஞர்களின் ஆய்வுகளின்படி, கி.மு. 31 திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.
மதக் கருத்து
குறிப்பிட்ட மத அடையாளம் வெளிப்படுத்தப்படவில்லை
திருவள்ளுவர் ஆண்டு
தமிழக அரசு தை மாதம் இரண்டாம் நாளை(மாட்டுப் பொங்கல் அன்று) திருவள்ளுவர் நாளாகக் கொண்டாடுகிறது.
ஆங்கில ஆண்டு + 31 · 2026 + 31 = 2057
;