தமிழ் பழமொழி
வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்.
பொருள்
நன்மை செய்தால் நன்மையும், தீமை செய்தால் தீமையும் நமக்கே வந்து சேரும்.
விளக்கம்
ஒரு விவசாயி நிலத்தில் எந்தத் தானியத்தை விதைக்கிறானோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும். அதுபோல, நாம் அடுத்தவர்களுக்கு நல்லது நினைத்து நல்லது செய்தால் நமக்கும் நல்லது நடக்கும்; அடுத்தவருக்குத் தீமை செய்தால் அந்தத் தீமை நமக்கே வினையாக வந்து முடியும்.