தமிழ் பழமொழி
எலி வளையானாலும் தனி வளை வேண்டும்.
பொருள்
சிறிய வீடாக இருந்தாலும் தன் சொந்த உழைப்பில் உருவான தனி வீடே நிம்மதி தரும்.
விளக்கம்
எலி வசிக்கும் வளை மிகச் சிறியதாக இருந்தாலும் அது தன் சொந்தப் பாதுகாப்பிற்காகத் தனித்து அமைத்துக் கொள்கிறது. மனிதர்களும் எவ்வளவு சிறிய இடமாக இருந்தாலும் சுதந்திரமாக வாழத் தனி வீடு வேண்டும் என விரும்புவர்.