தமிழ் பழமொழி
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
பொருள்
கோபத்தில் இருக்கும் போது ஒருவரால் சரியான முடிவுகளை எடுக்க முடியாது.
விளக்கம்
ஒரு மனிதன் கடுமையான கோபத்தில் இருக்கும் போது அவனது மூளை வேலை செய்யாது; சிந்திக்கும் திறனை இழந்துவிடுவான். அந்த நேரத்தில் அவன் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் தவறாகவும், பிற்காலத்தில் அவனுக்கே பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துவதாகவும் அமையும்.