தமிழ் பழமொழி
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
பொருள்
வெளித்தோற்றத்தின் பகட்டை மட்டும் பார்த்து ஒரு பொருளின் அல்லது மனிதனின் நற்பண்புகளை முடிவு செய்யக் கூடாது.
விளக்கம்
தங்கம் மட்டுமின்றி பல உலோகங்கள் பளபளப்பாக மின்னும் குணம் கொண்டவை. அதேபோல், வெளியில் நல்லவர்கள் போலவும் ஆடம்பரமாகவும் தோன்றும் அனைவரும் உள்ளுக்குள் தூய்மையானவர்களாக இருக்க மாட்டார்கள்.