GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
தமிழ் பழமொழி

ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.

பொருள்

ஆலங்குச்சியும் வேப்பங்குச்சியும் பற்களை வலுவாக்கும்; நாலடியாரும் திருக்குறளும் மனிதரின் சொல்லையும் வாழ்வையும் வளமாக்கும்.

விளக்கம்

ஆலமரம் மற்றும் வேப்பமரக் குச்சிகளால் பல் துலக்கினால் பற்கள் உறுதியடையும். அதுபோல, நான்கு வரிகள் கொண்ட நாலடியாரையும், இரண்டு வரிகள் கொண்ட திருக்குறளையும் படித்துப் பழகினால் ஒருவனுடைய சொற்கள் ஆழமும் தார்மீக உறுதியும் பெறும்.
;