தமிழ் பழமொழி
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்
அறிவில்லாத மூடர்கள் எவ்வளவுதான் நல்ல விஷயங்களுக்கு நடுவே இருந்தாலும் அதன் பெருமையை உணர மாட்டார்கள்.
விளக்கம்
சமையல் செய்யப் பயன்படும் கரண்டி (சட்டுவம்) நாள்தோறும் சுவையான குழம்புகளுக்குள் மூழ்கிக் கிடந்தாலும், அதனால் அந்த உணவின் சுவையைச் சுவைத்தறிய முடியாது. அதுபோல மூடர்கள் நல்லறிவை உணர மாட்டார்கள்.