தமிழ் பழமொழி
சர்க்கரை என்றால் தித்திக்குமோ?
பொருள்
ஒரு காரியத்தைச் செய்யாமல் வெறும் பேச்சினால் மட்டும் அதன் பலனை அடைந்துவிட முடியாது.
விளக்கம்
சர்க்கரை என்று வெறும் வாயால் உச்சரித்துக் கொண்டே இருந்தால் நாக்கில் இனிப்புச் சுவை வந்துவிடாது, அதை எடுத்துச் சுவைக்க வேண்டும். அதுபோல, திட்டங்களை வாயால் பேசாமல் செயலில் காட்ட வேண்டும்.