தமிழ் பழமொழி
மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.
பொருள்
அமிழ்தம் போன்ற அரிய உணவாக இருந்தாலும், அதை பிறருடன் பகிர்ந்து உண்ண வேண்டும்.
விளக்கம்
அவ்வை பிராட்டியின் கொன்றைவேந்தன் வரி இது. சாகாவரம் தரும் அமிழ்தமே கிடைத்தாலும், அதைத் தான் மட்டும் தனித்து உண்ணாமல், வீட்டிற்கு வரும் விருந்தினருக்கும் வழங்கி மகிழ வேண்டும்.