GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
தமிழ் பழமொழி

பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்.

பொருள்

நல்ல குணமுடைய மனிதர்களோடு நட்பு வைப்பவர்களுக்கும் தானாகவே நல்ல பெருமையும் நற்பெயரும் வந்து சேரும்.

விளக்கம்

ஒரு சாதாரண நாரிற்குத் தனிப்பட்ட மணம் ஏதும் கிடையாது. ஆனால், அது நறுமணமிக்க மலர்களோடு சேர்ந்து மாலையாகத் தொடுக்கப்படும் போது, அந்த மலர்களின் வாசனை நாருக்கும் கிடைக்கிறது. நல்லோரின் சேர்க்கை நம் மதிப்பையும் உயர்த்தும்.
;