தமிழ் பழமொழி
முத்து குளிக்கிறவன் மூச்சடக்க வேண்டும்.
பொருள்
பெரிய வெற்றிகளைப் பெற வேண்டும் என்றால் கடுமையான தியாகங்களையும் உழைப்பையும் தர வேண்டும்.
விளக்கம்
கடலின் ஆழத்தில் இருக்கும் விலைமதிப்பற்ற முத்தை எடுக்க நினைப்பவன் தன் உயிரைப் பணையம் வைத்து மூச்சை அடக்கி முழ்க வேண்டும். அதுபோல, வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையை அடைய கடுமையான உழைப்பும் தியாகமும் அவசியம்.