GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
தமிழ் பழமொழி

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.

பொருள்

புத்தகத்தில் உள்ள வெறும் தியரி அறிவு மட்டும் நிஜ வாழ்க்கைச் சிக்கல்களுக்குப் பயன்படாது; அனுபவம் தேவை.

விளக்கம்

ஒரு காகிதத்தில் சுரைக்காயின் படத்தை வரைந்து விட்டு, அதை வைத்துச் சமையல் செய்ய முடியாது. அதுபோல, புத்தகங்களில் உள்ள படிப்பறிவை மட்டும் வைத்துக்கொண்டு நிஜ வாழ்க்கையில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ள முடியாது; அதற்குப் பட்டறிவு மற்றும் அனுபவம் மிகவும் அவசியம்.
;