தமிழ் பழமொழி
நிறைகுடம் தளும்பாது.
பொருள்
முழுமையான அறிவுடையவர்கள் தேவையின்றித் தற்பெருமை பேசிக் கொண்டு ஆரவாரம் செய்ய மாட்டார்கள்.
விளக்கம்
முழுமையாக நீர் நிரப்பப்பட்ட குடத்தை எடுத்துச் செல்லும்போது அதில் இருந்து தண்ணீர் வெளியே சிந்தித் தளும்பாது; ஆனால் அரைகுறைத் தண்ணீர் உள்ள குடம் அதிகமாக ஆடும். அதுபோல, ஆழமான அறிவுடைய சான்றோர்கள் அடக்கமாக இருப்பார்கள், அரைகுறை அறிவுடையவர்களே அதிகம் பேசுவார்கள்.