GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
தமிழ் பழமொழி

பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்.

பொருள்

நல்லவர்களுடன் சேர்ந்து பழகும் சாதாரண மனிதனுக்கும் சமுதாயத்தில் தனி மதிப்பு கிடைக்கும்.

விளக்கம்

பூக்களைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் சாதாரண நாரிற்குத் தனிமணம் கிடையாது. ஆனால், அது நறுமணமிக்க மலர்களோடு சேர்ந்து மாலையாகத் தொடுக்கப்படும் போது, அந்தப் பூவின் மணத்தை நாரும் பெற்று மதிப்புடனே போற்றப்படும். நற்பண்புடையோரின் நட்பு நமக்கும் பெருமை தரும்.
;