தமிழ் பழமொழி
நுணலும் தன் வாயால் கெடும்.
பொருள்
தவளை தன் சத்தத்தால் பாம்பிற்கு இரையாவது போல, மனிதனும் தன் தேவையில்லாத பேச்சால் துயரப்படுவான்.
விளக்கம்
மழைக்காலத்தில் நுணல் (தவளை) மறைவிடத்தில் அமைதியாக இருக்காமல் கத்தி சத்தம் போடுவதாலேயே, பாம்பு அதைக் கண்டறிந்து விழுங்கிவிடும். மனிதனும் தேவையற்ற இடங்களில் தன் நாவைக் கட்டுப்படுத்தாமல் பேசித் தனக்குத்தானே பெரும் ஆபத்தை உருவாக்கிக் கொள்வான்.