தமிழ் பழமொழி
பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
பொருள்
மிக இனிமையான பொருளாக அல்லது நட்பாக இருந்தாலும், அளவுக்கு அதிகமாக எல்லை மீறினால் சலித்துவிடும்.
விளக்கம்
உடலுக்கு நன்மையைத் தரும் பாலே ஆனாலும் அதைத் தொடர்ந்து இடைவெளியின்றி அளவுக்கு அதிகமாகப் பருகினால் திகட்டிவிடும். அதுபோல, எவ்வளவுதான் நெருங்கிய நல்ல நட்பாக இருந்தாலும், ஒருவரோடு எல்லையற்றுத் தினமும் அதிகம் பழகிக் கொண்டிருந்தால் காலப்போக்கில் அந்த உறவின் மதிப்பு குறைந்து சலிப்பு தட்டும்.