தமிழ் பழமொழி
அடியாத மாடு படியாது.
பொருள்
கண்டிப்பு இல்லாதவர்கள் பணியமாட்டார்கள்.
விளக்கம்
அடி வாங்கிப் பழக்கப்படாத முரட்டு மாடு உழவுக்குப் பணியாது; மனிதர்களைச் சில சமயங்களில் தண்டித்து நெறிப்படுத்தாவிட்டால் அவர்கள் அடங்கமாட்டார்கள்.