தமிழ் பழமொழி
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
பொருள்
காலம் கடந்த பின் வருந்துவதால் எந்தப் பயனும் விளையாது.
விளக்கம்
அணையை உடைத்துக்கொண்டு வெளியேறிச் சென்ற ஆற்று நீரை எவ்வளவு கதறி அழுதாலும் திரும்பப் பெற முடியாது; விவேகமற்ற செயலுக்குப் பின் செய்யும் வருத்தம் வீண்.