தமிழ் பழமொழி
அமாவாசைப் பருக்கை என்றைக்கும் அகப்படுமா?
பொருள்
எப்போதோ ஒருமுறை கிடைக்கும் சிறப்பு வாய்ப்பு எந்நாளும் கிடைக்காது.
விளக்கம்
முன்னோர்களுக்குத் திதி கொடுக்கும் அமாவாசை நாளில் கிடைக்கும் விசேஷமான அறுசுவை உணவு தினந்தோறும் யாசகர்களுக்குக் கிடைக்காது; வாய்ப்பை நிலையெனக் கருதலாகாது.