தமிழ் பழமொழி
அரிசிக்குத் தக்க உலையும் ஆமுடையானுக்குத் தக்க வீறாப்பும்.
பொருள்
தகுதிக்கேற்பவே செலவும், கணவனின் தகுதிக்கு ஏற்பவே மனைவியின் கர்வமும் அமையும்.
விளக்கம்
பானையில் போடும் அரிசியின் அளவுக்கு ஏற்பவே உலை நீர் வைக்க வேண்டும்; அதுபோல தன் கணவனின் பொருளாதார நிலையை உணர்ந்தே ஒரு பெண் தன் தேவைகளையும் பெருமையையும் காட்ட வேண்டும்.