அறிவு மற்றும் கல்வி பற்றிய பழமொழிகள்
அறிவு மற்றும் கல்வி தொடர்பான தமிழ் பழமொழிகளை இப்பக்கத்தில் காணலாம்.
1.
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்.
பொருள்
அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வராமல், ஒரு விஷயத்தின் உண்மையை முழுமையாக ஆராய்ந்து அறிய வேண்டும்.
2.
கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு.
பொருள்
நாம் படித்த அறிவு மிகச் சிறியது, இன்னும் அறிய வேண்டிய விஷயங்கள் உலகம் முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன.
3.
இளமையில் கல்வி சிலையில் எழுத்து.
பொருள்
சிறு வயதில் கற்கும் கல்வி மனதில் பசுமையாக என்றும் அழியாமல் நிலைத்திருக்கும்.