உயிரியல்
1. மனித உடலில் இரத்தத்தை சுத்திகரிக்கும் முக்கியமான உறுப்பு எது?
- A. இதயம்
- B. கல்லீரல்
- C. சிறுநீரகம்(Kidney)
- D. நுரையீரல்
2. மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு எது?
- A. மூளை
- B. கல்லீரல்
- C. தோல்
- D. இதயம்
3. இரத்தம் சிவப்பு நிறமாக இருப்பதற்கான காரணம் எது?
- A. ஹீமோகுளோபின்
- B. கார்பன் டைஆக்சைடு
- C. பிளாஸ்மா
- D. வெள்ளை இரத்த அணுக்கள்
4. உயிரின் அடிப்படை அலகு என்ன?
- A. செல்
- B. உயிரணு
- C. ப்ரோட்டீன்
- D. தசை
5. DNA-வின் முக்கியப் பயன்பாடு என்ன?
- A. உயிரினங்களின் மரபணுப் பண்புகளை (genetic information) ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்துவது
- B. செரிமானத்தை கட்டுப்படுத்துதல்
- C. ஆற்றலை வழங்குதல்
- D. ஆக்சிஜனை கொண்டு செல்வது
6. தாவரங்களில் உணவுத் தயாரிப்பு எந்த செயல்முறையின் மூலம் நடைபெறுகிறது?
- A. ஒளிச்சேர்க்கை (Photosynthesis)
- B. செரிமானம்
- C. சுவாசம்
- D. நச்சுத்தன்மை நீக்கம்
7. ஹீமோகுளோபின் இல்லாததால், எந்த உயிரினத்தின் இரத்தம் சிவப்பு நிறமாக இல்லை?
- A. ஆமை
- B. நண்டு
- C. ஐஸ் மீன்(Icefish)
- D. ஆக்டோபஸ்
8. DNA-வின் முழுப் பெயர் என்ன?
- A. Dioxyribo Nucleic Acid
- B. Deoxyribonucleic acid
- C. Double Helix Nucleic Acid
- D. Deoxy Helix Acid
9. இலைகள் பச்சையாக இருக்க என்ன காரணம்?
- A. குளோரோபில்(பச்சையம்)
- B. ஹீமோகுளோபின்
- C. கார்பன் டைஆக்சைடு
- D. ஆக்ஸிஜன்
10. மனிதனுக்கு மரபணுவியல் (Genetically) அடிப்படையில் மிக அருகிலுள்ள விலங்கு எது?
- A. குரங்கு (Monkey)
- B. சிம்பான்சி (Chimpanzee)
- C. கோரில்லா (Gorilla)
- D. ஆரங்குடான் (Orangutan)
11. மனித உடலில் “இரத்த வங்கி” என்று அழைக்கப்படும் உறுப்பு எது?
- A. இதயம்
- B. சிறுநீரகம்
- C. கருப்பை
- D. மண்ணீரல்(Spleen)
12. மனித உடலில் “சிவப்பணுக்கள்” (RBC) உருவாகும் முக்கிய இடம் எது?
- A. மண்ணீரல் (Spleen)
- B. இதயம்
- C. எலும்பு மஜ்ஜை
- D. சிறுநீரகம்
13. மனித உடலில் Vitamin–D உருவாகும் முக்கிய மூல காரணம் என்ன?
- A. உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேட் மூலம்
- B. நீரில் கரையும் வைட்டமின்கள் மூலம்
- C. மனித உடலில் உள்ள கொழுப்பு செல்கள் மூலம்
- D. சூரிய ஒளியின் மூலம்
14. மனித உடலில் “இன்சுலின்” சுரக்கும் உறுப்பு எது?
- A. சிறுநீரகம்
- B. இதயம்
- C. கணையம்(Pancreas)
- D. கருப்பை(Uterus)
15. இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் (WBC) முக்கிய பணி என்ன?
- A. உடலுக்கு ஆற்றல் வழங்குதல்
- B. இரத்தத்தில் ஆக்சிஜனை எடுத்துச் செல்லுதல்
- C. உடலை நோய்க்கிருமிகளிடமிருந்து பாதுகாத்து, தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுதல்
- D. இரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்துதல்
16. மனித இருதயத்தில் எத்தனை அறைகள் உள்ளன?
- A. 2
- B. 3
- C. 4
- D. 5
17. பூமியில் எண்ணிக்கையில் அதிகமாக காணப்படும் உயிரினங்கள் எவை?
- A. மனிதர்கள்
- B. பறவைகள்
- C. பூச்சிகள்
- D. மீன்கள்
18. வௌவால்கள் இரவில் பறப்பதற்கான முக்கிய காரணங்கள் என்ன?
- A. பகல் நேரத்தில் அதிக எதிரிகள் இருப்பதால்
- B. இரவில் உணவுக்கான போட்டி குறைவாக இருப்பதால்
- C. இரவில் சுறுசுறுப்பாக செயல்படும் இயல்பு காரணமாக
- D. அனைத்தும்
19. ஏன் தவளை மழைக்காலத்தில் அதிகமாகக் குரைக்கிறது?
- A. மழைக்காலம் தவளையின் இனப்பெருக்க காலம்
- B. மற்ற தவளைகளுடன் தொடர்பு கொள்ள
- C. எதிரிகளின் நடமாட்டத்தை எச்சரிக்க
- D. அனைத்தும்
20. தட்டான்(Dragonfly) ஏன் நீரின் அருகே அதிகமாக காணப்படுகிறது?
- A. அது நீரில் உணவுகளை தேடுகிறது
- B. அதன் இனப்பெருக்கம் மற்றும் முட்டைகள் இடும் செயல்கள் நீரிலேயே நடைபெறும்
- C. அதன் வாழ்க்கைச் சுழற்சியின் பெரும்பகுதி நிம்ஃப் (larva) நிலையில் நீரில் வாழ்ந்து, பின்னர் பறக்கும் நிலைக்கு மாறுகிறது
- D. அனைத்தும்
21. தாமரையின் இலைகள் நீரில் நனைவதில்லை காரணம் என்ன?
- A. இலைகளின் மேற்பரப்பில் கெட்டியான மெழுகுப் பூச்சு இருப்பதால் – இது நீரை ஒட்டவிடாமல் தடுக்கிறது
- B. நீர்த்துளிகள் உருண்டு ஓடிவிடுவதால்
- C. இலையின் சரிந்த ஓரம் நீர்த்துளிகளை எளிதில் கீழே விழச்செய்வதால்
- D. அனைத்தும்
22. மயில் (Peacock) மழைக்காலத்தில் அதிகமாக நடனமாடுவதற்கான காரணம் என்ன?
- A. மழைக்காலத்தில் உணவுப் பொருட்கள் அதிகம் கிடைக்கும்
- B. மழைக்கால சூழ்நிலை மயிலின் தோகையை அழகாக மாற்றுகிறது
- C. மழைக்காலம் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற சூழ்நிலையாக இருப்பதால், ஆண் மயில் பெண் மயில்களை ஈர்க்க நடனமாடுகிறது
- D. மழைக்காலத்தில் மயில்கள் அதிக ஆற்றல் பெறுகின்றன
23. ஒட்டகம்(Camel) ஏன் “பாலைவனக் கப்பல்” என்று அழைக்கப்படுகிறது?
- A. பாலைவன மணலில் சீரான இயக்கத்துடன் மெதுவாகச் செல்கிறது
- B. நீர் மற்றும் உணவு இல்லாமல் நீண்ட தூரம் பயணம் செய்யும் திறன் கொண்டது
- C. பாலைவனத்தில் போக்குவரத்து கருவியாகப் பயன்படுகிறது
- D. அனைத்தும்
24. நகரங்களில் குருவிகள்(Sparrows) குறைந்து வருவதற்கான முக்கிய காரணம் என்ன?
- A. நவீன வீடுகளில் கூடு கட்ட இடமின்மை மற்றும் வாழ்விட இழப்பு
- B. பூச்சிக்கொல்லிகளின் அதிகமான பயன்பாட்டால் உணவுப் பற்றாக்குறை
- C. செல்போன் டவர்களின் கதிர்வீச்சு குருவிகளின் எண்ணிக்கையை பாதிக்கலாம் என சில ஆய்வுகள் கூறுகின்றன
- D. அனைத்தும்
25. சில கடல் ஆமைகள் எத்தனை ஆண்டுகள் வரை வாழலாம் என்று கருதப்படுகிறது?
- A. 10–20 ஆண்டுகள்
- B. 25–40 ஆண்டுகள்
- C. 50–100 ஆண்டுகள்
- D. 150 ஆண்டுகள்