ஒலிம்பிக் விளையாட்டுகள்
1. ஒலிம்பிக் விளையாட்டுகள் முதன்முறையாக எப்போது நடைபெற்றது?
- A. 1896
- B. 1900
- C. 1924
- D. 1936
2. ஒலிம்பிக் போட்டிகள் முதன்முறையாக எந்த நகரத்தில் நடத்தப்பட்டது?
- A. ஏதென்ஸ், கிரீஸ்
- B. பாரிஸ், பிரான்ஸ்
- C. லண்டன், இங்கிலாந்து
- D. ரோம், இத்தாலி
3. ஒலிம்பிக் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது?
- A. 2
- B. 3
- C. 4
- D. 5
4. ஒலிம்பிக் விளையாட்டில் முதல் முறையாக பெண்கள் எந்த ஆண்டு போட்டியிட்டனர்?
- A. 1912
- B. 1900
- C. 1910
- D. 1896
5. 2024 ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடைபெற்றது?
- A. லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா
- B. பாரிஸ், பிரான்ஸ்
- C. டோக்கியோ, ஜப்பான்
- D. லண்டன், இங்கிலாந்து
6. ஒலிம்பிக் கொடியில் உள்ள ஐந்து வளையங்கள் எதை குறிக்கின்றன?
- A. ஐந்து கண்டங்கள் – ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா, ஓஷியானியா, அமெரிக்கா
- B. ஐந்து விளையாட்டு விதிகள்
- C. ஐந்து போட்டிகள் நடைபெறும் நாடுகள்
- D. ஐந்து முக்கிய விளையாட்டுகள்
7. ஒலிம்பிக் கொடியில் உள்ள ஐந்து வளையங்கள் எந்த நிறங்களில் இருக்கின்றன?
- A. சிவப்பு, நீலம், பச்சை, சாம்பல், பழுப்பு
- B. கருப்பு, வெண்மை, மஞ்சள், சிவப்பு, ஊதா
- C. நீலம், மஞ்சள், கருப்பு, பச்சை, சிவப்பு
- D. நீலம், சிவப்பு, வெள்ளி, பச்சை, ஆரஞ்சு
8. ஒலிம்பிக் கொடியை வடிவமைத்தவர் யார்?
- A. பியரி டி குபேர்டின் (Pierre de Coubertin)
- B. அலெக்சாண்டர் கிரஹாம் பெல்
- C. லூயிஸ் பாஸ்டியர்
- D. கலீலியோ
9. ஒலிம்பிக் கொடியின் ஐந்து வளையங்களில் மஞ்சள் நிறம் எந்த கண்டத்தை குறிக்கிறது?
- A. ஆசியா
- B. ஆப்ரிக்கா
- C. ஐரோப்பா
- D. இந்தியா
10. இந்தியா முதல் ஒலிம்பிக் பதக்கம் எப்போது வென்றது?
- A. 1928
- B. 1947
- C. 1951
- D. 1965
11. ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஒலிம்பிக் தீச்சுடர் எப்போதும் எரியவைக்கப்படுவதற்கான காரணம் என்ன?
- A. மைதானத்தை ஒளிரச் செய்ய
- B. போட்டியின் முடிவை குறிக்க
- C. தூய்மை, உண்மை, ஒளி, அறிவு போன்ற மனித நேர்மறை மதிப்புகளை பிரதிபலிக்க
- D. வெற்றியாளர்களை கௌரவிக்க
12. பண்டைய ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலில் வழங்கப்பட்ட பரிசு என்ன?
- A. தங்க பதக்கம்
- B. பண பரிசு
- C. ஆலிவ் மர இலைகளால் ஆன கிரீடம் (ஆலிவ் கிளை மாலை)
- D. வெள்ளி பதக்கம்
13. ஒலிம்பிக் போட்டிகளில் அதிகமாக நடைபெறும் விளையாட்டு எது?
- A. நீச்சல்
- B. ஜிம்னாஸ்டிக்ஸ்
- C. தடகளம் (Athletics)
- D. ஹாக்கி
14. 2024 பாரிஸ் ஒலிம்பிக் வரை அதிகமான தங்கப் பதக்கங்கள் பெற்ற நாடு எது?
- A. சீனா
- B. அமெரிக்கா
- C. ஜப்பான்
- D. ரஷ்யா
15. ஒலிம்பிக் தீப்பந்தம் முதலில் எங்கு ஏற்றப்பட்டு, பின்னர் ஒலிம்பிக் நடைபெறும் நாட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது?
- A. பாரிஸ், பிரான்ஸ்
- B. ஒலிம்பியா, கிரீஸ்
- C. ரோம், இத்தாலி
- D. லண்டன், இங்கிலாந்து
16. ஒலிம்பிக் தீப்பந்தப் பயணம்(Torch Relay) என்றால் என்ன?
- A. ஒலிம்பிக் வீரர்களுக்கான பயிற்சி முகாம்
- B. ஒலிம்பிக் தீப்பந்தம் ஒலிம்பியாவில் இருந்து போட்டி நடைபெறும் நகரம் வரை எடுத்துச் செல்லப்படும் பயணம்
- C. ஒலிம்பிக் தொடக்க விழாவில் நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சி
- D. ஒலிம்பிக் பதக்கங்களை வீரர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி
17. ஒலிம்பிக் தீப்பந்தப் பயணத்தின் போது, தீப்பந்தத்தை யார் எடுத்துச் செல்கின்றனர்?
- A. ஒலிம்பிக் போட்டியின் அதிகாரிகள்
- B. பாதுகாப்பு படையினர் மட்டும்
- C. விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள்
- D. போட்டி நடைபெறும் நாட்டின் அரசியல் தலைவர்கள்
18. ஒலிம்பிக் Torch Relay பயணத்தில், தீப்பந்தம் எவ்வாறு எடுத்துச் செல்லப்படுகிறது?
- A. கார், கப்பல், விமானம், குதிரை போன்ற பல்வேறு வழிகளில்
- B. விமானம் மூலம் மட்டும்
- C. ரயில் மூலம் மட்டும்
- D. ஓடிக்கொண்டு மட்டும்
19. Torch Relay பயணத்தின் இறுதியில், ஒலிம்பிக் தீப்பந்தம் எங்கு ஏற்றப்படுகிறது?
- A. கிரீஸ் நாட்டின் ஹெரா கோயிலில்
- B. IOC தலைமையகத்தில்
- C. ஒலிம்பிக் வீரர்களின் தங்கும் இடம்
- D. ஒலிம்பிக் நடைபெறும் நகரின் பிரதான விளையாட்டு அரங்கில்
20. 1976 மான்ட்ரியல் ஒலிம்பிக் Torch Relay வரலாற்றில், தீப்பந்தம் நீரில் எடுத்துச் செல்லப்பட்டபோது, ஒரு நீச்சல் வீரர் அதை எவ்வாறு நீந்தியபடி எடுத்துச் சென்றார்?
- A. கப்பலில் வைத்து
- B. நீர்ப்புகா தீப்பந்தம் (Waterproof torch) மற்றும் ஃபைபர் ஆப்டிக் தொழில்நுட்பம் மூலம்
- C. தீப்பந்தத்தை மூடப்பட்ட பெட்டியில் வைத்து
- D. தீப்பந்தத்தை ரோபோட் மூலம் நீருக்குள் செலுத்தி
21. ஒலிம்பிக் மாஸ்காட் என்றால் என்ன?
- A. ஒலிம்பிக் போட்டியின் அதிகாரப்பூர்வ கோஷம்
- B. விளையாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் விலங்கு அல்லது கற்பனை உருவம்
- C. ஒலிம்பிக் போட்டியில் பயன்படுத்தப்படும் விளையாட்டு சாதனம்
- D. ஒலிம்பிக் போட்டியின் முடிவில் வழங்கப்படும் விருது
22. ஒலிம்பிக் போட்டிகளில் முதல் மூன்று இடத்திற்கான வீரர்களுக்கு வழங்கப்படும் பதக்கங்கள் எவை?
- A. தங்கம், வெள்ளி, இரும்பு
- B. தங்கம், வெள்ளி, வெண்கலம்
- C. வெள்ளி, வெண்கலம், இரும்பு
- D. தங்கம், வெண்கலம், இரும்பு
23. ஒலிம்பிக் தங்கப் பதக்கம் உண்மையில் முழுமையாக தங்கத்தால் செய்யப்பட்டதா?
- A. ஆம், முழுவதும் தூய தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது
- B. இல்லை, குறைந்தபட்சம் 92.5% வெள்ளி மற்றும் சுமார் 6 கிராம் தங்கம் மேலே பூசப்படுகிறது
- C. இல்லை, வெண்கலத்தில் தங்கம் பூசப்பட்டிருக்க வேண்டும்
- D. இல்லை, வெள்ளி மட்டும் பயன்படுத்தப்பட்டது
24. 2008 பீஜிங் ஒலிம்பிக் தீப்பந்தப் பயணம்(Torch Relay) உலகில் அதிக தூரம் சென்றதாகக் கருதப்படுகிறது. அந்த Torch Relay எவ்வளவு கிலோமீட்டர் பயணம் செய்தது?
- A. 50,000 கி.மீ
- B. 85,000 கி.மீ
- C. 137,000 கி.மீ
- D. 200,000 கி.மீ
25. ஒலிம்பிக் தீப்பந்தம் எவ்வாறு ஏற்றப்படுகிறது?
- A. மாசு இல்லாத எரிபொருள் Torch மூலம்
- B. மின்சார ஒளி மூலம்
- C. மின்னியல் Torch மூலம்
- D. பரபோலிக் கண்ணாடி மூலம் சூரிய ஒளியை திரட்டி