அறத்துப்பால் ·
பாயிரவியல் ·
வான்சிறப்பு
குறள் 11
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
சொல் பொருள்
வான்நின்று - மழை பெய்து
உலகம் - உலக உயிர்கள்
வழங்கி வருதலால் - நிலைபெற்று வாழ்வதால்
தான் - மழையே
அமிழ்தம் - உயிர் வாழச் செய்யும் அரிய உணவு
என்றுணரற் பாற்று - என்று கருதத்தக்கது
உலகம் - உலக உயிர்கள்
வழங்கி வருதலால் - நிலைபெற்று வாழ்வதால்
தான் - மழையே
அமிழ்தம் - உயிர் வாழச் செய்யும் அரிய உணவு
என்றுணரற் பாற்று - என்று கருதத்தக்கது
விளக்கம்
மழை பெய்து உலக உயிர்களை வாழச் செய்வதால், மழையே உலக உயிர்களுக்கு அமிழ்தம் போன்றது என்று உணரலாம்.
கருத்து
மழை இவ்வுலக உயிர்களைக் காக்கும் அமிழ்தம் போன்றது.