GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
அறத்துப்பால் · பாயிரவியல் · வான்சிறப்பு குறள் 14

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.


சொல் பொருள்

ஏரின் - ஏரால்
உழாஅர் - உழமாட்டார்கள்
உழவர் - உழவர்கள்
புயல் - மழை
வாரி - வருவாய்
வளங்குன்றிக் கால் - வளம் குறைந்தால்

விளக்கம்

மழை என்னும் வருவாய் குறைந்துவிட்டால், பயிர்களை விளைவிக்கும் உழவர்களும் ஏரால் நிலத்தை உழமாட்டார்கள்.

கருத்து

மழை வளம் குறைந்தால் உழவர்களால் உழவு செய்ய முடியாது.
;