அடிப்படை புவியியல் வினா விடைகள்
1. பூமியின் சுழற்சி (Rotation) ஒரு முழு சுற்றுக்கான காலம் எவ்வளவு?
- A. 7 நாட்கள்
- B. 23 மணி 56 நிமிடம் 4.09 விநாடிகள்
- C. 12 மணி நேரம்
- D. 365 நாட்கள்
2. பூமியின் மொத்த மேற்பரப்பில் சுமார் எத்தனை விழுக்காடு நீர் அடங்கியுள்ளது?
- A. 50%
- B. 61%
- C. 71%
- D. 81%
3. ஒரு நாளில் இரவும் பகலும் ஏற்படுவதற்கான காரணம் என்ன?
- A. பூமி சூரியனை சுற்றுவதால்
- B. பூமியின் சுழற்சி அச்சு சாய்வு காரணமாக
- C. பூமி தன்னைத்தானே அதன் அச்சில் சுழல்வதால்
- D. சூரியன் சுற்றி சுழல்வதால்
4. புவி சூரியனைச் சுற்றி ஒரு முறை சுற்ற எவ்வளவு நாள் எடுக்கும்?
- A. 365 ¼ நாட்கள்
- B. 365 நாட்கள்
- C. 366 நாட்கள்
- D. 364 நாட்கள்
5. ஏன் ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கும் ஒருமுறை லீப் வருடம் (Leap Year) கொண்டாடப்படுகிறது?
- A. சந்திரனின் சுழற்சி காரணமாக
- B. கால அட்டவணையை மாற்றுவதற்காக
- C. பூமி சூரியனைச் சுற்ற 365 ¼ நாட்கள் தேவைப்படுவதால்
- D. பிப்ரவரி மாதத்தில் அதிக நாட்கள் தேவைப்படுவதால்
6. பூமியின் உள்மையத்தில் (Inner Core) வெப்பநிலை சுமார் எத்தனை டிகிரி செல்சியஸாக இருப்பதாக கருதப்படுகிறது?
- A. 5000°C – 6000°C
- B. 4000°C
- C. 3000°C
- D. 2000°C
7. புவியின் மையத்தில் உள்ள முக்கிய உலோகங்கள் எவை?
- A. அலுமினியம் மற்றும் தங்கம்
- B. இரும்பு மற்றும் நிக்கல்
- C. வெள்ளி மற்றும் தாமிரம்
- D. சிலிக்கான் மற்றும் கார்பன்
8. பருவநிலைகள் ஏற்படுவதற்கான காரணம் என்ன?
- A. பூமி சூரியனை 23.5° சாய்வான அச்சுடன் நீள்வட்ட பாதையில் சூரியனைச் சுற்றுவதால்
- B. சந்திரனின் சுழற்சி
- C. காற்றழுத்த மாற்றங்கள்
- D. பூமியின் சூரியனைச் சுற்றும் நேரம்
9. பூமியின் சுழற்சி மேற்கிலிருந்து கிழக்காக நடைபெறுவதற்கான எடுத்துக்காட்டு எது?
- A. நிலநடுக்கம் ஏற்படுவது
- B. சூரியன் மேற்கு திசையில் உதயமாகும்
- C. சூரியன் கிழக்கில் உதயமாகி மேற்கில் மறைவது
- D. பூமியின் சுற்றுப்பாதை நீள்வட்டமாக இருப்பது
10. கடலில் உப்பு அதிகமாக இருக்க காரணம் என்ன?
- A. ஆறுகள் தங்கள் பாதையில் கரைத்த தாதுக்கள் மற்றும் உப்புகளை கடலில் சேர்ப்பதால், மேலும் கடலிலிருந்து நீர் ஆவியாகும் போது, உப்பு கடலில் தங்கி விடுவதால்
- B. பனிக்கட்டிகள் கரைவதால்
- C. கடலில் உள்ள உயிரினங்கள்
- D. கடலில் உள்ள பாறைகளின் உராய்வால்
11. உலகின் மிகப்பெரிய பெருங்கடல் எது?
- A. அட்லாண்டிக் பெருங்கடல்
- B. இந்திய பெருங்கடல்
- C. அரபிக்கடல்
- D. பசிபிக் பெருங்கடல்
12. சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம் எது?
- A. செவ்வாய்
- B. புதன்
- C. வெள்ளி
- D. பூமி
13. பூமியில் நிலப்பரப்பின் அடிப்படையில் மிகச் சிறிய கண்டம் எது?
- A. ஐரோப்பா
- B. ஆஸ்திரேலியா
- C. அண்டார்டிகா
- D. தென் அமெரிக்கா
14. சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கிரகம் எது?
- A. செவ்வாய்
- B. சனி
- C. வியாழன்
- D. யுரேனஸ்
15. பூமியின் இயற்கையான செயற்கைக் கோள் எது?
- A. ஸ்புட்னிக் 1
- B. சந்திரன்
- C. ஆரியபட்டா
- D. இன்சாட்-1B
16. பூமியின் வளிமண்டலத்தில் அதிக அளவில் காணப்படும் வாயு எது?
- A. ஆக்ஸிஜன்
- B. கார்பன் டை ஆக்சைடு
- C. நைட்ரஜன்
- D. ஹைட்ரஜன்
17. புளூட்டோ 2006-ஆம் ஆண்டு கிரக பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணங்கள் எவை?
- A. புளூட்டோ சூரியனைச் சுற்றி வரவில்லை
- B. புளூட்டோ கோள வடிவத்தில் இல்லை
- C. புளூட்டோ அதன் சுற்றுப்பாதையில் உள்ள மற்ற பொருட்களை துப்புரவு செய்யவில்லை
- D. அனைத்தும்
18. பூமியின் ‘ஓசோன் அடுக்கு’ (Ozone Layer) எதை பாதுகாக்கிறது?
- A. பூமியின் ஈர்ப்பு விசையை
- B. சூரியனிலிருந்து வரும் புற ஊதா (UV) கதிர்வீச்சிலிருந்து உயிர்களை
- C. நிலவின் இயக்கத்தை
- D. கடல் நீரின் வெப்பநிலையை
19. உலகிலேயே மிக நீளமான மலைத்தொடர் எது?
- A. இமயமலைத் தொடர்
- B. ராக்கி மலைத்தொடர்
- C. ஆண்டிஸ் மலைத்தொடர்
- D. கிரேட் டிவைடிங் ரேஞ்ச் மலைத்தொடர்
20. உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் எது?
- A. டெல்லி
- B. சாவோ பாலோ
- C. டோக்கியோ(ஜப்பான்)
- D. நியூயார்க்
21. “சிவப்புக் கிரகம்” என்று அழைக்கப்படும் சூரிய மண்டலத்தின் கிரகம் எது?
- A. புதன்
- B. செவ்வாய்
- C. வெள்ளி
- D. வியாழன்
22. சூரிய மண்டலத்தில் மிக அதிகமான இயற்கை நிலவுகள்(moons) கொண்ட கிரகம் எது?
- A. வியாழன்
- B. சனி
- C. யுரேனஸ்
- D. நெப்டியூன்
23. சூரியனுக்கு மிக அருகிலுள்ள கிரகம் புதன் ஆக இருந்தும், சூரிய குடும்பத்தில் மிக அதிக வெப்பமுடைய கிரகம் வெள்ளி ஆக இருப்பதற்கான காரணம் என்ன?
- A. புதன் கிரகத்தில் வளிமண்டலம் இல்லை,இதனால் வெப்பம் நீண்ட நேரம் தங்காது
- B. வெள்ளி கிரகத்தில் பசுங்குடில் விளைவை (greenhouse effect) ஏற்படுத்தும் அடர்த்தியான கார்பன் டை ஆக்சைடு வளிமண்டலம் உள்ளது, இதனால் வெப்பம் சிறைப்பிடிக்கப்படுகிறது
- C. வெள்ளி கிரகம் சூரியனிடமிருந்து அதிக வெப்பத்தை உறிஞ்சுகிறது
- D. மேலே கூறிய அனைத்தும்
24. விஞ்ஞானிகள் உயிர்கள் வாழக்கூடிய சாத்தியம் உள்ளதாக கருதும் கிரகங்கள் எவை?
- A. செவ்வாய் (Mars)
- B. K2-18b
- C. இரண்டும்
- D. எதுவும் இல்லை
25. சூரிய மண்டலத்தில் வளையங்களால் சூழப்பட்டிருக்கும் மிக பிரபலமான கிரகம் எது?
- A. செவ்வாய்
- B. சனி
- C. பூமி
- D. புதன்