GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

மத்திய அரசு

1. இந்தியாவின் உண்மையான நிர்வாகத் தலைவர் யார்?

  • A. பிரதமர்
  • B. மக்களவை சபாநாயகர்
  • C. துணை குடியரசுத் தலைவர்
  • D. குடியரசுத் தலைவர்
Answer: A. பிரதமர்

2. குடியரசுத் தலைவர் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?

  • A. 4
  • B. 5
  • C. 6
  • D. 7
Answer: B. 5

3. பாராளுமன்றம் எத்தனை அவைகளைக் கொண்டுள்ளது?

  • A. இரண்டு(மக்களவை (Lok Sabha), மாநிலங்களவை (Rajya Sabha))
  • B. மூன்று
  • C. ஒன்று
  • D. நான்கு
Answer: A. இரண்டு(மக்களவை (Lok Sabha), மாநிலங்களவை (Rajya Sabha))

4. இந்திய குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து விலகலாம் என்பதற்கான கடிதத்தை யாருக்கு அளிக்க வேண்டும்?

  • A. பிரதமர்
  • B. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
  • C. மக்களவை தலைவர்
  • D. துணை குடியரசுத் தலைவர்
Answer: D. துணை குடியரசுத் தலைவர்

5. இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர் யார்?

  • A. பிரதமர்
  • B. குடியரசுத் தலைவர்
  • C. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
  • D. மக்களவை தலைவர்
Answer: B. குடியரசுத் தலைவர்

6. மத்திய அமைச்சரவையின் தலைவர் யார்?

  • A. குடியரசுத் தலைவர்
  • B. துணை குடியரசுத் தலைவர்
  • C. பிரதமர்
  • D. மக்களவை தலைவர்
Answer: C. பிரதமர்

7. இந்தியாவின் நாணய மற்றும் வங்கி கொள்கையை நிர்வகிக்கும் நிறுவனம் எது?

  • A. இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India - RBI)
  • B. இந்திய அரசின் நிதி அமைச்சகம்
  • C. இந்திய ஸ்டேட் வங்கி (State Bank of India - SBI)
  • D. இந்தியாவின் வணிக வங்கிகள்
Answer: A. இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India - RBI)

8. பாராளுமன்றத்தின் மேலவை எது?

  • A. மக்களவை
  • B. மாநிலங்களவை(Rajya Sabha)
  • C. அமைச்சரவை
  • D. உச்ச நீதிமன்றம்
Answer: B. மாநிலங்களவை(Rajya Sabha)

9. மத்திய அரசின் பட்ஜெட்டை யார் தாக்கல் செய்கிறார்?

  • A. குடியரசுத் தலைவர்
  • B. பிரதமர்
  • C. நிதியமைச்சர்
  • D. துணை குடியரசுத் தலைவர்
Answer: C. நிதியமைச்சர்

10. ஒரு மசோதா சட்டமாக மாற, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலைப் பெற்ற பிறகு யாரின் ஒப்புதல் பெற வேண்டும்?

  • A. பிரதமர்
  • B. நிதியமைச்சர்
  • C. உச்ச நீதிமன்றம்
  • D. குடியரசுத் தலைவர்
Answer: D. குடியரசுத் தலைவர்
;