தமிழ் பழமொழி
அரைக்குடம் ததும்பும் நிறைகுடம் ததும்பாது.
பொருள்
அற்ப அறிவுடையோர் ஆரவாரம் செய்வர்; பேரறிவாளர்கள் அமைதியாக இருப்பர்.
விளக்கம்
அரைகுறையாக நீர் நிரம்பிய குடம் தூக்கிச் செல்லும் போது அலைபாயும், ஆனால் முழுமையாக நிரம்பிய குடம் ததும்பாமல் அமைதியாக இருக்கும்; அரைகுறை ஞானமுள்ளவர்களே அதிகம் வாய் பேசுவர்.