தமிழ் பழமொழி
ஆட்டுக்குட்டியைத் தோளிலே வைத்துக்கொண்டு ஊர் எங்கும் தேடினது போல.
பொருள்
தன் அருகிலேயே இருக்கும் பொருளை அறியாமல் தொலைதூரத்தில் தேடி அலைதல்.
விளக்கம்
தன் தோள் மீதே ஆட்டுக்குட்டியைப் போட்டுக்கொண்டு அதை மறந்து காடு மேடெல்லாம் தேடி அலைந்த மேய்ப்பனைப் போல, மனிதன் தன்னுள் இருக்கும் அமைதியை வெளியுலகில் தேடுகிறான்.