தமிழ் பழமொழி
ஆத்திரக்காரன் கோத்திரம் அறிவானா?
பொருள்
அவசரமும் ஆவேசமும் உள்ளவன் நியாய தர்மங்களையும் தகுதியையும் பார்க்கமாட்டான்.
விளக்கம்
கடும் கோபத்திலோ அல்லது அவசரத்திலோ இருக்கும் மனிதன் எதிரில் இருப்பவரின் குலப் பெருமையையோ தகுதியையோ பாராமல் கண்ணை மூடிக்கொண்டு தாக்கிவிடுவான்.