தமிழ் பழமொழி
ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம்.
பொருள்
எதிரி அல்லது சுயநலம் கொண்டவர்கள் நம் மீது காட்டும் போலிப் பாசத்தையும் இரக்கத்தையும் நம்பக் கூடாது.
விளக்கம்
மழையில் நனையும் ஆட்டைப் பார்த்து அதைக் கொன்று தின்னத் துடிக்கும் ஓநாய் பரிதாபப்பட்டு அழுவது போன்றது. உள்ளுக்குள் வஞ்சகத்தை வைத்துக் கொண்டு வெளியில் தங்களுக்குச் சம்பந்தமில்லாத விஷயத்திற்குப் போலி அனுதாபம் காட்டுபவர்களைப் பற்றிய பழமொழி.