தமிழ் பழமொழி
பாம்புக்குப் பால் வார்த்தாலும் விஷத்தையே கக்கும்.
பொருள்
தீய குணம் படைத்தவர்களுக்கு எவ்வளவு நன்மைகள் செய்தாலும் அவர்களின் வஞ்சக குணம் மாறாது.
விளக்கம்
நச்சுக் குணம் கொண்ட பாம்பிற்கு எவ்வளவுதான் ஆசையாகப் பால் ஊற்றி வளர்த்தாலும், அது தன் விஷத் தன்மையையோ கடிக்கும் குணம் போன்ற பிறவி இயல்பையோ மாற்றிக் கொள்ளாது. அதுபோலவே துரோகிகளுக்குச் செய்யும் நன்மைகளும் வீணே.