தமிழ் பழமொழி
இக்கரைக்கு அக்கரை பச்சை.
பொருள்
தன் நிலைமையை விட மற்றவர்களின் நிலைமை நன்றாக இருப்பது போல் தோன்றுவது மாயை.
விளக்கம்
ஆற்றின் இந்த கரையில் இருந்து பார்க்கும் போது அடுத்த கரை மிகவும் பசுமையாகத் தெரியும், ஆனால் அங்கு சென்றால் தான் தெரியும் அங்கும் இதே போன்ற மணலும் கஷ்டமும் தான் என்று. அதுபோலத்தான் அடுத்தவர் வாழ்க்கை எப்போதும் நமக்கு இன்பமாகத் தோன்றும்.