தமிழ் பழமொழி
எறும்பு ஊரக் கல்லும் தேயும்.
பொருள்
தொடர் முயற்சியும் பயிற்சியும் இருந்தால் கடினமான காரியத்தையும் சாதித்து விடலாம்.
விளக்கம்
மிகவும் மென்மையான உடலமைப்பைக் கொண்ட எறும்புகள் ஒரே பாதையில் தொடர்ந்து நடந்து சென்றால் கடினமான பாறாங்கல்லும் தேய்ந்து தடம் பதிக்கும். அதுபோல, எத்தகைய கடினமான இலக்கையும் விடாமுயற்சியால் அடைந்துவிடலாம்.