தமிழ் பழமொழி
கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
பொருள்
ஒரே நேரத்தில் ஒன்றோடொன்று முரண்பாடான இரண்டு காரியங்களைச் சாதிக்க நினைப்பது இயலாது.
விளக்கம்
கூழ் குடிக்கும் போது மீசையில் கூழ் ஒட்டும். மீசையும் சுத்தமாக இருக்க வேண்டும், கூழும் குடிக்க வேண்டும் என்று நினைப்பது சாத்தியமில்லை. வாழ்க்கையில் எதையாவது ஒன்றை அடைய மற்றொன்றை விட்டுக் கொடுக்க வேண்டும்.