தமிழ் பழமொழி
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்.
பொருள்
எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும், அவரை வழிநடத்தவும் ஊக்கப்படுத்தவும் ஒரு குரு தேவை.
விளக்கம்
சுயமாய் நன்றாக எரியும் விளக்காகவே இருந்தாலும், அதன் திரியை அவ்வப்போது தூண்டிவிட்டால் தான் அது மேலும் பிரகாசமாக எரியும். அதுபோல, எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும் அவர்களைத் தட்டி எழுப்பி நல்வழிப்படுத்த ஒரு தகுதியான வழிகாட்டி தேவை.