தமிழ் பழமொழி
தர்மம் தலைகாக்கும்.
பொருள்
நாம் பிறருக்குச் செய்யும் தர்ம காரியங்கள் ஆபத்தான நேரத்தில் நம் உயிரைக் காப்பாற்ற உதவும்.
விளக்கம்
நாம் வாழும் காலத்தில் பிரதிபலன் எதிர்பாராமல் ஏழைகளுக்கும் பசியோடு இருப்பவர்களுக்கும் செய்யும் நல்ல தர்ம காரியங்கள் மற்றும் புண்ணியங்கள், பிற்காலத்தில் நமக்கு ஏதேனும் ஒரு பெரிய ஆபத்து வரும் போது ஏதோ ஒரு வடிவில் வந்து நம் உயிரைக் காப்பாற்றும்.