தமிழ் பழமொழி
அடாது செய்தவன் படாது படுவான்.
பொருள்
தகாத செயல்களைச் செய்பவர்கள் தாங்க முடியாத துயரங்களை அனுபவிப்பார்கள்.
விளக்கம்
அநீதியையும் முறையற்ற கொடுமைகளையும் மற்றவர்களுக்கு இழைப்பவர்கள் பிற்காலத்தில் சொல்லொணாத துன்பங்களை அடைந்து பாடம் கற்பார்கள்.