அதிகாரத்தில் உள்ளவர் தனக்கு வேண்டப்பட்டவராக இருந்தால் எங்கும் நன்மை கிடைக்கும்.
விளக்கம்
உணவு பரிமாறுபவர் தனக்குச் சொந்தமானவராக இருக்கும் போது எந்தப் பந்தியில் அமர்ந்தாலும் தாராளமான உணவு கிடைப்பது போல, செல்வாக்குள்ளவர்கள் துணை இருந்தால் எங்கும் ஆதாயம் உறுதி.
கை விரல் நகங்கள், கால் நகங்களை விட வேகமாக வளரும். ஏனெனில் கை விரல்கள் இதயத்திற்கு அருகிலிருக்கின்றன.இதனால் அங்கு இரத்த ஓட்டம் அதிகமாகும். அதிகமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்சிஜன் கிடைப்பதால் நகங்கள் விரைவாக வளரும்.
GK Question for You
"God of Cricket" என்று அழைக்கப்படும் வீரர் யார்?
Answer: சச்சின் டெண்டுல்கர்
TNPSC Question for You
கீழ்கண்டவற்றுள் எது தவறாக பொருந்தி உள்ளது?
(1) டிரான்ஸ் சைபீரியன் இருப்புப்பாதை - இது பால்டிக் கடலையும், பசிபிக் பெருங்கடலையும் இணைக்கிறது
(2) டிரான்ஸ் காஸ்பியன் இருப்புப்பாதை - இது மத்திய ஆசியாவையும் ஜப்பானையும் இணைக்கிறது
(3) கனேடியன் பசிபிக் இருப்புப்பாதை - இது அட்லாண்டிக் பெருங்கடலையும், இந்திய பெருங்கடலையும் இணைக்கிறது
(4) டிரான்ஸ் கான்டினென்டல் இருப்புப்பாதை - இது பியூனஸ் அயர்ஸ் நகரத்தையும் வால்பரைஸோ நகரத்தையும் இணைக்கிறது GR-4 (2025)
Answer: (3) மட்டும்
;
📩 Subscribe Now
Subscribe to receive the latest Tamil GK questions,
TNPSC updates, quizzes, and study materials directly in your inbox.