தமிழ் பழமொழி
அட்டையை எடுத்து மெத்தையில் வைத்தாலும் செத்தையையே நாடும்.
பொருள்
கீழான குணம் உடையவர்கள் உயர்ந்த இடத்திற்கு வந்தாலும் பழைய இழிவையே நாடுவார்கள்.
விளக்கம்
அட்டையை எடுத்து எவ்வளவு பஞ்சு மெத்தையில் படுக்க வைத்தாலும் அது காய்ந்த இலை சருகுக் குப்பையை நோக்கியே ஊர்ந்து செல்லும்; இயல்பு மாறாது.