தமிழ் பழமொழி
அதிஷ்டவான் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும்.
பொருள்
நல்வாய்ப்பும் யோகமும் உள்ளவருக்கு எல்லாச் செயல்களும் லாபமாக மாறும்.
விளக்கம்
காலம் சாதகமாக இருக்கும் ஒருவன் சாதாரணமாக எளிய காரியத்தில் இறங்கினாலும் கூட அது அவனுக்கு அளவற்ற நற்பலனையும் செல்வத்தையும் பெற்றுத் தரும்.