தமிழ் பழமொழி
அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி.
பொருள்
தலைவனின் ஒழுக்கத்தையே நாட்டு மக்களும் பின்பற்றுவார்கள்.
விளக்கம்
ஒரு நாட்டின் மன்னன் நேர்மையாகவும் நீதியாகவும் இருந்தால் மக்களும் நல்வழியில் வாழ்வார்கள்; தலைவன் சீரழிந்தால் குடிகளும் சீரழிவர்.