தமிழ் பழமொழி
அரத்தை அரம் அறுக்கும், வயிரத்தை வயிரம் அறுக்கும்.
பொருள்
வலிமையானதை அதைவிட வலிமையான தன்மையுள்ள சாதனமே அடக்கும்.
விளக்கம்
இரும்புக் கோலை அரம் கொண்டு அறுப்பது போலவும், கடினமான வைரத்தை மற்றொரு வைரத்தைக் கொண்டே பட்டை தீட்டுவது போலவும், சாமர்த்தியசாலியை நிகரான அறிவாற்றலாலேயே வெல்ல முடியும்.