GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
அறத்துப்பால் · பாயிரவியல் · கடவுள் வாழ்த்து குறள் 1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.


சொல் பொருள்

அகர – ‘அ’ என்னும் எழுத்து
முதல – முதன்மையானது / தொடக்கமானது
எழுத்தெல்லாம் – எழுத்துகள் அனைத்தும்
ஆதி – முதன்மையானவர் / தொடக்கமானவர்
பகவன் – இறைவன்
முதற்றே – முதலாவதாக உள்ளது
உலகு – உலகம்

விளக்கம்

எழுத்துகள் அனைத்திற்கும் ‘அ’ எழுத்து முதலாவதாக இருப்பது போல, இந்த உலகத்திற்கும் ஆதி பகவனே முதன்மையானவர். உலகம் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் இறைவனே அடிப்படையாக உள்ளார்.

கருத்து

எல்லாவற்றிற்கும் ஒரு முதன்மையான தொடக்கம் இருப்பது போல, உலகிற்கும் இறைவனே முதன்மையானவர்.
;